ஞாயிறு, 28 மார்ச், 2010

பத்தாம் வகுப்பு


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் முதல் தாளில் கேள்வித்தாள் மாற்றிக்கொடுக்கப்பட்ட விவகாரத்தினை விவாதிக்கும் முன் ,சில விசயங்களை அலச வேண்டிஉள்ளது.

குளறுபடி நடந்த இடத்தில் ஒரு தலைமை ஆசிரியர் ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வு அலுவலர் மற்றும் பறக்கும் படை என அனைத்து மதிப்புக்குரியவர்களும் இருந்தனர். விடை தாள் கொடுக்கப்பட்ட உடனே ,மாணவர்கள் தங்களுக்கு உரிய கேள்வி தாள் இல்லை...மாற்றித்தரவும் என வற்புறுத்தியுள்ளனர். ஆசிரியர் இது தான் உனக்குரியது என்று கூறி அமரச் செய்துள்ளார், மீண்டும் தேர்வு கண்காணிப்பாளர், தனி அலுவலர் , பறக்கும் படை என அனைவரிடமும் சொல்லியும் கேள்வி தாளை மாணவர்களால் மாற்ற முடிய வில்லை என்பது செய்தித்தாள் வழியாகவும், நண்பர்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

பாதிக்கப்பட்ட 29 மாணவர்கள் தேர்வு நடந்த பள்ளியில் , மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ். எல். சி. மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். அப்படி இருக்கும் போது அருகில் உள்ள அரை மாணவர் விடை தாளை பார்த்து இருந்தாலே , இத் தவறை மாற்றி இருக்க முடியும். தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அலுவலர் முறையான பயிற்சி எடுத்திருப்பின் அல்லது நான்கு வகை வினாத்தாள் பற்றி போதுமான அறிவு பெற்று இருப்பின் மாணவர்களுக்கு சரியான விடைத்தாளை தந்திருக்க முடியும்.


" தேர்வு பணியினை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவது இல்லை.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் 'ஆளை விட்டால் போதும்'என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். " தினமலர்.(25 மார்ச் 2010 ) .

அரசு கவனத்திற்கு ....ஏன் மூத்த ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர். ?
இளம் ஆசிரியர்கள் ஏன் பார்க்க துடிக்கின்றனர்...? இதுதான் வயது வித்தியாசம் ....அனுபவ முதிர்ச்சி . இன்று ஆசிரியப் பணி என்பது எலி வாங்கித்தந்த வேலை போல ஆகிவிட்டது. எலி வேலை வாங்கி தந்த கதையை கூறும் முன் ....மூத்த ஆசிரியர்களின் மன நிலை சொல்லி விடுகிறான்.

தங்கள் மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் மற்றும் தேர்வு பணிக்கு சென்றால் மதியம் தம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வர முடியாது. தேர்வு பணிக்கான பள்ளியின் தூரமும் அதிகமாக இருக்கிறது, பணியினை முடித்து வகுப்புக்கு வர முடியாத நிலையில் மாணவன் படிப்பு பதிக்கப் படும் என்ற எண்ணத்தில் அநேகம் ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர் . இளம் ஆசிரியர்கள் எப்படி மதியம் இந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து தப்பிப்பது,மதியம் ஓய்வு எடுப்பது என்று நினைத்து தேர்வு பணியினை விரும்பி வாங்கி பார்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த வகையில் உண்மை .

அரசு தேர்வு பணி முடிந்த பின்னும் பள்ளி செல்லும் ஆசிரியர்கள் பற்றி சர்வே நடத்தினால், நான் சொல்லுவது போல் மாணவர்கள் மீதும் , பள்ளியின் நன் மதிப்பின் மீதும் அக்கறை மற்றும் பற்றுள்ள ஆசிரியர்கள், அதுவும் மூத்த ஆசிரியர்கள் தான் அதிகம் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவர்.இது எல்லா நிலை மாணவர்களுக்கும் பொருந்தும் . பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே பிற மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்த வேண்டிஉள்ளது.
அதுவும் தேர்வு பணி வாங்க மறுப்புக்கு காரணம் ஆகும்.

அரசு எல்லா விசயங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற விடை தாள் மாற்று குளறுபடி ஆகாமல் தடுக்க , தேர்வுக்கு முன்னே அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்துவது எப்படி?விடைத்தாள் வகைகளை அறிவது எப்படி? மாணவனுக்கு உரிய விடை தாளை வழங்குவது எப்படி ?மாணவனின் முறையிடுகளை உடனே அரசு கவனத்திற்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி ? என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவது அவசியம் ஆகும் .

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அவன் முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து , மதிப்பெண் தருவதால் மட்டும் பாதிக்கப் பட்ட மாணவனின் மன நலனை திருப்பி தரமுடியுமா? அதனால் அவன் பிற தேர்வுகளில் பின் தங்கி போவதற்கும் வாய்ப்பு உள்ளதே! . கல்வியாளர்கள் மாணவன் நலம் பற்றி சிந்தித்தால் இது போன்ற தவறுகள் நடக்காது.

ஆசிரியர்களை தண்டிப்பதால் மட்டும் இனி வரும் காலங்களில் இத்தவறுகள் நடக்காது என்பதற்கு என்ன உறுதி? தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் செல்லாததனால் தான் கேள்வி தாள் குளறுபடியை சரி செய்ய முடியவில்லை என்று கூறும் முதன்மை தேர்வு அதிகாரியின் பேச்சையும் கவனிக்க வேண்டும். தண்டனை பெற்று அப்பணியினை தொடருவதை விட தவிர்ப்பது நல்லது என்ற மனநிலையும் தேர்வு பணி மறுப்புக்கு காரணமாகவும் அமையலாம். ஆகவே , முறையான பயிற்சி , தேர்வு பணி குறித்து அச்சம் போக்குதல் போன்றவற்றால் மட்டுமே நாம் சரி செய்திட முடியும் .

மத்திய அரசினை போன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்து, பனிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வினையும் நடத்தி , உயர் கல்வியில் மாணவன் சேர்வதற்கு , மாணவனின் அனைத்து திறன் வெளிப்படும் வகையில் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி , மாணவன் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அவனுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் பிற துறை சார்ந்த படிப்புகள் தொடர நடவடிக்கை எடுத்தால் , ஆசிரியர்களும் மாணவனுக்கு மதிப்பெண் சார்ந்த கல்வியை தராமல் , மாணவன் திறன் சார்ந்த கல்வியை தந்து மாணவனின் முழு திறமை வெளிப்பட உழைப்பார். ஆசிரிய பணியும் எலி கொடுத்த வேலையாக அமையாது.


அது என்ன எலி கதை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஊரில் எலி அதிகம் தொல்லை தந்தது , அந்த கிராமம் முழுவதும் ஒன்று கூடி, அனைவரும் பூனை வளர்ப்பது என முடிவெடுத்தனர். பூனை வளர்க்க பால் தேவை பட்டது , அனைவரும் வீட்டிற்கு ஒரு பசுமாடு பாலுக்காக வளர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. பசு வளர்க்க அனைவரும் புல் வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து வயலுக்கு உழைக்க செல்வது என முடிவெடுத்து , வேலைக்கு சென்றனர். அப்போது தம் குழந்தைகள் தேவையிலாமல் சண்டை போடுவது கண்டு , கிராமம் அந்த ஊருக்கு அருகில் உள்ள படித்த இளைஞருக்கு வேலை தருவது எனவும் அதற்க்கு சம்பளம் கிராம பொது சபை கொடுப்பது எனவும் முடிவெடுத்து , வேலை கொடுக்கப்பட்டது. மாணவனுக்கு அதாவது தம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க ஆசிரிய பணி அல்ல , குழந்தைகளை கண்காணிக்க , சண்டைபோடாமல் பாதுகாக்க தரப்பட்ட வேலை . இது கிராம குழந்தைகள் நலம் கொண்டு ,அறிவு வளர்க்க ஏற்படுத்தப்பட்ட வேலை அன்று. எலி கொடுத்த வேலை.

சமச்சீர் கல்வி கொண்டுவரும் நம் தமிழக அரசு தயவு செய்து மத்திய அரசை போன்று பொது தேர்வினை ரத்து செய்து ,மாணவன் நலனில் அக்கறை கொண்டு மாணவன் அனைத்து திறன் பேரம் வகையில் அட்டை கல்வி கொண்டுவந்ததை போன்று , மதிப்பெண் கல்வி முறையை நீக்கி , கல்லூரி கல்வியில் அவனின் அனைத்து திறனும் சோதிக்கும் வகையில் பொது தேர்வு நடத்தி, அதில் அவன் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவனுக்கு உரிய படிப்பினை கொடுப்பதன் மூலம் தமிழக கல்வி துறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழலாம்.


அரசு கவனத்தில் கொண்டு வர நீங்களும் நல்ல கருத்துகள் பகிர்ந்து , தமிழக மாணவர்கள் கல்வி நலனில் பாடுபட அனைவருக்கும் விஷயத்தை எடுத்து செல்லுவோம் , சொல்லுவோம்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

சிவராத்திரி


மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

திங்கள், 15 மார்ச், 2010

யுகாதி

சந்திரனின் பிறை அடிப்படையில் அமாவாசை முடிவு முதல் அடுத்த அமாவாசை முடிவு வரை ஒரு மாதம் என்று கணக்கிடப்பட்டு, 12 மாதங்கள் ஒரு சந்திர வருடம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர மாதம் வளர் பிறை மற்றும் தேய்பிறை என இரு பாகங்களாக இருக்கும்.

16.3.2010 செவ்வாய் கிழமை அன்று காலை 2:30 மணி அளவில் பால்குன மாஸ அமாவாசை முடிந்து சைத்திர பிரதமை திதி பிறப்பதால் உதயத்தில் பிரதமை திதி உள்ள அன்று யுகாதி கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சூரியனின் அடிப்படையில் வருடப்பிறப்பு அமைகிறது.யுகாதி சாலிவாகன சகாப்தம் முதலாக கொண்டு கணக்கிடப்படுகிறது, வியாழன்கிரக அடிப்படையில் 60ஆண்டு சுழற்ச்சி அடிப்படையில் ஆண்டின் பெயர் இடம் பெறுகிறது. வரும் ஆண்டு விக்ருதி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது


சந்திரன் பௌர்னமி அன்று எந்த நட்சத்திரத்தின் அருகில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயராலே மாதம் அழைக்கப்படும். உதாரணமாக சைத்ரமாதம் பௌர்னமி அன்று முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தின் இருக்கும்.சந்திர மாதத்தின் அளவு: சராசரி: 29 நாள் 12 மணி நேரம் 44 நிமிடம்

சந்திர வருடத்தின் அளவு: 354.3672 நாட்கள்

சூரிய வருடம் – சந்திர வருட வேறுபாடு 10.89 நாள்இப்படி வித்யாசப்படும் 10.89 நாளை 2.7 வருடத்திற்கு ஒரு முறை ஒரு கூடுதல் மாதம் சேர்த்து சூரிய வருடத்துடன்சமப்படுத்துவார்கள்.எந்த சூரிய(சௌரமான)மாதத்தில் 2 அமாவாசைகள் வருகிறதோ அந்த சூரிய(சௌரமான) மாதத்திற்கு உள்வரும் சந்திரமாதம் அதிகமாதம் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாதத்தில் வரும் சந்திரமாதம் கணக்கில் கொள்ளாமல் அடுத்து வரும் சந்திரமாதம் அந்த சூரிய மாதத்தின் பெயராலே நிஜசந்திர மாதம் என்று அழைக்கப்படுகிறது.புது வருடமான விக்ருதி ஆண்டில் சூரிய(தமிழ்) சித்திரை மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் அதில் வரும் “சந்திரமாதமான” வைசாக மாதம் “அதிகவைசாகம்” என்றும் அடுத்து சூரிய மாதமான வைகாசியில் வரும் சந்திரமாதம் “நிஜ வைசாகம்” என்றும் அழைக்கப்படும்.வழிபாட்டு முறை:அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக்கோலம் இட்டு, நிலைப்படிக்கு மாவிலை தோரணம் கட்டி, நல்லலெண்ணெய், சீயக்காய் தலைக்கு தேய்த்து குளித்து. புத்தாடை உடுத்தி, பூஜை அறையில் புது ஆண்டு நன்மைகளை தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இறைவனை வணங்கி, பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவார்கள்.வேப்பம் பூ - மொட்டு, புளி நீர், வெல்லம், இளம் மாங்காய் துறுவல், பச்சை மிளகாய், உப்பு கலந்த அறுசுவை நீர் பருகுவார்கள்.மதியம் அறுசுவையான உணவுகளை இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று வருவார்கள். உறவினர்கள்,பெரியவர்கள் காலில் வழுந்து ஆசிபெறுவதே இந்நாளில் மிக முக்கியமான வழக்கம் ஆகும்.இந்நாளில் கலை கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுஅதில் கலைஞர்கள் சிறப்பிப்பார்கள்.தமிழகத்திலும் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இன்றைய தினம் சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் தந்து கௌரவிக்கப்படுவார்கள்.யுகாதி வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 7 மார்ச், 2010

கன்யாகுமாரிKanyakumari takes its name from the Kumari Amman or Kanyakumari Temple, situated in the town, on the sea-shore, the very confluence of the three water-bodies - Bay of Bengal, Indian Ocean and the Arabian Sea. In his work on ancient India, Ptolemy had identified Kanyakumari (Cape Comorin) along with the Gulf of Mannar as a centre for pearl fishery. He also identifies Korkai, a place to the east of Kanyakumari as an emporium of pearl trade,also Travancore Census 1931 says that Paravars ruled that Coast and built the temple for their reverence to Sea Goddess.

There are multiple myths revolving around this place:

According to hindu legend, Kanya Devi, an avatar of Parvati, was to marry Shiva, but as he failed to show up on his wedding day, the rice and other grains meant for the wedding feast remained uncooked and remain unused thereafter. As the legend goes, the uncooked grains turned into stones as time went by. Some believe that the small stones which look like rice on the shore today, are indeed grains of the wedding that was never solemnized. Kanya Devi is now considered a virgin goddess who blesses pilgrims and tourists who flock the town.
According to another hindu legend, Lord Hanuman dropped a piece of earth as he was carrying a mountain with his life-saving herb, Mrita Sanjivani from the Himalayas to Lanka (Sri Lanka) during the Rama-Ravana war. This chunk of earth is called Marunthuvazh Malai, which is literally translated to "hills where medicine is found".This is said to be the reason for the abundance of unique native medicinal plants in the area. Marunthuvazh Malai is located near Kottaram about 7 km from Kanyakumari town on the Kanyakumari-Nagercoil highway.
The sage Agasthya, who was himself an expert in medicinal herbs, is believed to have lived around this site in ancient days. The reason why, some believe, so many medicinal herbs are to be found on these hills near Kanyakumari. There is even a village by the name Agastheeswaram close to the town, named after the sage. Today, there is a small Ashram on the middle of the Maruthuvazh Malai hill, which tourists visit (after a short trek from the base of the hill), both to visit the Ashram and also to take a glimpse of the sea near Kanyakumari a few kilometres away, and the greenery below.

The 133 ft tall Thiruvalluvar StatueKanyakumari has been a great centre for art and religion for centuries. It was also an area of great trade and commerce. It was ruled by the Cholas, the Cheras, the Pandyas and the Nayaks. The architectural beauty of the temples in the area are the works of these rulers. Later Kanyakumari became part of the Venad kingdom with its capital at Padmanabhapuram. The king of Venad, Anizham Thirunal Marthanda Varma, established Travancore by extending his domain further north up to Azhva, during his reign from 1729 to 1758. By this, the present Kanyakumari District came to be known as Southern Travancore. In 1741, Maharaja Marthanda Varma defeated the Dutch East India Company at the famous Battle of Colachel.

Kanyakumari was under the rule of the Paravar Kings till the downfall of Pandyas,and later by kings of Travancore under the overall suzerainty of the British until 1947, when India became independent. Travancore joined the independent Indian Union in 1947. The reign of the Travancore royals came to an end.

Under the Travancore state, the town, and the modern administrative district that bears its name, Kanyakumari District, gained both socially and economically.

In 1949, Kanyakumari became part of the reconstituted Travancore-Cochin State. Around this time, a popular agitation for the amalgamation of Kanyakumari District with Tamil Nadu by the Tamil-speaking majority of the district intensified, under the leadership of Kavimani Desigavinayagam Pillai Eventually, in 1956, Kanyakumari was integrated with Tamil Nadu (then known as Madras State) as per the language-based reorganisation of States.

Christianity arrived in South India around AD 52 through St. Thomas, one of the twelve Apostles of Christ. However, European missionaries, who arrived in the 16th century, propagated Christianity in the area. St. Francis Xavier (April 7, 1506 – December 2, 1552) was the pioneer in preaching Christianity in the present day Kanyakumari district. Islam is believed to have entered the southern part of India through Kanyakumari during the early part of the eighth century AD through traders and missionaries who came through sea-routes. Islam, Christianity and Jainism have also contributed to the architectural wealth and literary heritage of the region.

நாஞ்சில் குமரன்


நான் குமரன் நாஞ்சில் நாட்டை சேர்ந்தவன். சிங்கார சென்னையில் நிருபராக வேலை பார்த்து வருகிறேன்.